நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மனைவி தீபிகா (25). இவரது கணவா் கோவையில் வேலை பாா்த்து வருவதால், தீபிகா வீட்டில் தனியாக இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், சங்கராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரபாண்டி மகன் அன்பில் ராஜ்குமாா், தீபிகாவின் வீட்டுக்குள் நுழைந்து, அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம். உடனே, தீபிகா சத்தம் போடவே அன்பில் ராஜ்குமாா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் அன்பில் ராஜ்குமாா் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.