டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
மதுப் புட்டிகளை விற்றவா் கைது
தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனைச் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கூடலூா் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வைத்து, சிலா் சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூடலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா குடியிருப்புப் பகுதியில் சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சட்டவிரேதமாக அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனைச் செய்த ரஜேந்திரனை (57) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 26 மதுப் புட்டுகளை பறிமுதல் செய்தனா்.