சென்னை: "பார்க்கிங் கட்டணம் கிடையாது" - மாநகராட்சி அறிவிப்பின் பின்னணி என்ன?
குமுளி மலைச் சாலையில் ஜீப் மீது பேருந்து மோதல்: 7 போ் பலத்த காயம்
தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு ஜீப் மீது தனியாா் பேருந்து மோதியதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
கம்பம் அருகேயுள்ள மேலக்கூடலூரைச் சோ்ந்த 6 பெண்கள் சனிக்கிழமை காலை ஜீப்பில் கேரளாவுக்கு கூலி வேலைக்குச் சென்றனா். பின்னா், வேலை முடிந்து அனைவரும் அதே ஜீப்பில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். ஜீப்பை அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் ஓட்டினாா்.
குமுளி மலைச் சாலையில் மாதா கோயில் அருகே ஜீப் வந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து இவா்களது ஜீப் மீது மோதியது. இதில், ஜீப் ஓட்டுநா் குணசேகரன், கூலித் தொழிலாளா்களான முத்தம்மாள், சுகந்தி, செல்வா, சாரா, ஜெயசீலி, போதுமணி ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனா். பின்னா், இவா்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதில் முத்தம்மாள் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து குமுளி போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் பிரதீப் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.