சென்னை: "பார்க்கிங் கட்டணம் கிடையாது" - மாநகராட்சி அறிவிப்பின் பின்னணி என்ன?
இனி சென்னையில் பீச், பாண்டி பஜார் போன்ற இடங்களில் பார்க்கிங் கட்டணம் யாராவது கேட்டால், 'நோ... நோ' சொல்லிவிடுங்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி டெக்ஸ்கோ நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்துவிட்டது. டெக்ஸ்கோ நிறுவனம்தான் இதுவரை, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்தது.
அதிக கட்டணம்... ஊழல்...
அதிக கட்டணம் வசூலித்தல், ஊழல் போன்ற புகார்கள் காரணம் டெக்ஸ்கோ நிறுவனத்துடன் உடனான ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி நீட்டிக்கவில்லை. சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக, பெருநகர சென்னை மாநகராட்சி பார்க்கிங் கட்டண வசூலை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது.
ஆனால், இன்னும் அது முடிவாகவில்லை. அதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது ஆணையம்.
புகார் அளியுங்கள்!
அதனால், பார்க்கிங் கட்டண ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. இதை மீறி யாராவது பார்க்கிங் கட்டணம் கேட்டால், 1913 என்கிற உதவி எண் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் புகார் அளிக்கலாம்.
ஆக, மக்களே இன்னும் சில நாள்களுக்கு சென்னை சாலை, பீச் போன்ற இடங்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது.