தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,180க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கும் விற்பனையாகி வருகிறது.
ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையான நிலையில், இன்று நான்காவது நாளாக மீண்டும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.9,110-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.9,170-க்கும் விற்பனையானது. இன்று நான்காவது நாளாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
அதேபோல், இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.