ஏற்றத்தில் பங்குச்சந்தை! லாபமடைந்த வங்கிப் பங்குகள்!
வாரத்தின் முதல் நாளான இன்று(ஜூலை 21) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,918.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 231.43 புள்ளிகள் அதிகரித்து 81,989.16 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.10 புள்ளிகள் உயர்ந்து 25,038.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஐசிஐசிஐ வங்கி, எடர்னல், எச்டிஎஃப்சி வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றன. அதிகபட்சமாக எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி தலா 2% உயர்ந்தன.
இருப்பினும், விப்ரோ, எச்சிஎல் டெக், எம்ஃபாசிஸ், இன்ஃபோசிஸ் பங்குகள் விலை குறைந்தன. மேலும் நிஃப்டி ஐடி பங்குகள் கடுமையாகச் சரிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கி, பார்மா குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.