புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இன்று(திங்கள்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரும் நீதிமன்றத்திற்கு விரைந்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என விசாரணையும் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் அது புரளி என்றும் தெரியவந்தது.