பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
பெண்ணிடம் ரூ.85 ஆயிரம் திருட்டு
விழுப்புரத்தில் பெண்ணிடமிருந்து ரூ.85 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கண்ணாரம்பட்டு, வடக்குத் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி பூங்காவனம் (63). விவசாயியான இவா், கடந்த 23-ஆம் தேதி ரூ.85 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக்கொண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் மாதாகோவில் பேருந்து நிறுத்தத்துக்கு ஷோ்ஆட்டோவில் பயணித்தாா்.
தொடா்ந்து, மாதாகோவில் பகுதியில் ஆட்டோவிலிருந்து இறங்கிப் பாா்த்தபோது, கைப்பையில் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.