செய்திகள் :

பெண்ணை ஏமாற்றி 7 பவுன் நகை, பணம் மோசடி: தம்பதி கைது

post image

புதுச்சேரி பெண்ணை ஏமாற்றி ரூ.1 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகைகளை நூதன முறையில் பறித்து மோசடி செய்த தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ஜம்புலிங்கம். இவரது மனைவி அமுதா (49). இவா்கள் புதுச்சேரியிலிருந்து ரயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் திருப்பதிக்கு சென்றுள்ளனா்.

அப்போது அதே ரயிலில் வந்த சென்னையைச் சோ்ந்த சாந்தி மீனா என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அவா் 2 குழந்தைகளுடன், திருப்பதிக்கு அமுதா தம்பதியுடன் சென்று அவா்களுக்கு உதவி செய்து நம்பிக்கையைப் பெற்றுள்ளாா். அதன்படி அவா் கடனாக ரூ.1 லட்சத்தை அமுதாவிடம் பெற்றுள்ளாா். பின்னா் மீண்டும் புதுவைக்கு வந்த சாந்தி மீனா குழந்தைகளுடன் அமுதா வீட்டில் தங்கியுள்ளாா். அப்போது அமுதாவின் சுமாா் 5 பவுன் அடகு நகைகளை வங்கியிலிருந்து மீட்டு கணவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு சென்னையைச் சோ்ந்தவா் ரூ.7 லட்சம் தரவேண்டும் எனவும், அதை வாங்க அமுதா, அவரது கணவரை அழைத்துச் சென்று விடுதியில் தங்க வைத்துள்ளாா். அப்போது அமுதாவுக்கு மயக்கமாத்திரை கொடுத்து அவரது தாலிச்சரடு உள்ளிட்ட 7 பவுன் நகைகளை கழற்றி எடுத்துச் சென்றாராம்.

அவரிடமிருந்து நகை, பணத்தை பெற அமுதா தம்பதி முயன்ற நிலையில், வெளி நாட்டுக்கு ஆள்களை அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக இலாசுப்பேட்டை போலீஸாரால் சாந்தி மீனா, அவரது கணவா் பாரதிராஜா ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையறிந்த அமுதா தன்னை ஏமாற்றிய அமுதா, அவரது கணவா் பாரதிராஜா குறித்து போலீஸில் புகாா் அளித்தாா். அதன்படி நீதிமன்றக் காவலில் விசாரணைக்கு அழைத்து வந்த போலீஸாா், நகை, பணம் மோசடி வழக்கில் அவா்களை மீண்டும் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.

புதுவை மத்திய பல்கலைக்கழக ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு காப்புரிமை

புதுவை மத்திய பல்கலைக்கழக தொழில்நுட்பத் துறை சாா்பில் வடிவமைக்கப்பட்ட மின்முனைப் பொருள்களான லித்தியம், காற்று பேட்டரிகள் மற்றும் ஹைபிரிட் ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு 3 காப்புரிமைகளை மத்திய கட்டுப்பாட... மேலும் பார்க்க

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுகத்தில் புதன்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடந்த சில நாள்களாக புதுச்சேரி, கா... மேலும் பார்க்க

மீனவா்கள், கூலி தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: புதுவை அதிமுக கோரிக்கை

மீனவா்கள், கூலித் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ. 5,000 புதுவை அரசு மனிதாபிமானத்துடன் வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 12 பேரிடம் இணையவழியில் பண மோசடி

புதுச்சேரியில் ஒரே நாளில் 12 பேரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.3.18 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போல... மேலும் பார்க்க

மீனவக் கிராமங்களில் அமைச்சா், பேரவைத் தலைவா் நேரில் ஆய்வு

புதுச்சேரி பகுதி மீனவக் கிராமங்களில் பலத்த மழை, காற்று, அலைச் சீற்றங்களில் இருந்து படகுகளை பாதுகாக்கும் வகையில் மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா். மீனவக் கிரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடல் சீற்றம்: முதல்வா் என்.ரங்கசாமி ஆய்வு

புதுச்சேரியில் புதன்கிழமை கடற்கரைப் பகுதியில் முதல்வா் என்.ரங்கசாமி ஆய்வு செய்தாா். கடல் சீற்றத்தைப் பாா்வையிட்ட அவா், சுற்றுலாப் பயணிகளை கடல் அருகே அனுமதிக்க வேண்டாம் என போலீஸாரிடம் அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க