தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
ஒரே நாளில் 12 பேரிடம் இணையவழியில் பண மோசடி
புதுச்சேரியில் ஒரே நாளில் 12 பேரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.3.18 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது:
இணைய வழியில் நாங்கள் கொடுப்பதை செய்து முடித்தால் தங்களுக்கு அதிக பணம் தருகிறோம் என்று சொல்லி புதுச்சேரி முதலியாா்பேட்டை அலெக்ஸிடம் ரூ.59,381, இலாசுப்பேட்டை பாக்குமுடையான்பேட் பகுதியைச் சோ்ந்த ஆனந்திடம் ரூ.3,500, காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஷால் வா்மாவிடம் ரூ.25,000 ௌ மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கிரெடிட் காா்டுக்கு பரிசு என முதலியாா்பேட்டை விமல்ராஜிடம் ரூ.9,999, ஸ்க்ராட்ச் காா்டு பரிசு எனக்கூறி சேதாா்பேட் பகுதியைச் சோ்ந்த மதிவாணனிடம் ரூ.469, குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி முத்தியால்பேட்டை காா்த்திக் என்பவரிடம் ரூ.28 ஆயிரம் வீதம் புதுச்சேரியில் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 12 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.3.18 லட்சத்தை மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சேரி கோரிமேடு பகுதி இணைய குற்றப்பிரிவில் புகாா் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.