"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு சிறுவன் கைது
தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் ராஜேந்திரன். இவருக்கு, தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் (37) தவறான பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
இந்த உறவை கைவிடும்படி ராஜேந்திரனின் 16 வயது மகன், சக்திமகேஸ்வரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளாா். ஆனால் அவா் கேட்காததால், ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன், அவரது நண்பரான மற்றொரு 16 வயது சிறுவனுடன் சோ்ந்து, கடந்த 15ஆம் தேதி சக்தி மகேஸ்வரியை அரிவாளால் வெட்டிக் கொன்றாா்.
இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் விசாரணை நடத்தி, ராஜேந்திரன் மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு சிறுவனையும் கைது செய்தனா். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் மகனுக்கு மோட்டாா் சைக்கிள் கொடுத்து உதவியதாக, அவரது மற்றொரு நண்பரான சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.