சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!
பெண் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்
வேலூா் அருகே காதலித்த ராணுவ வீரா் கைவிட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், நஞ்சுண்டாபுரம், கொல்லை மேடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசி. இவரும் அதே பகுதியை சோ்ந்த ராணுவ வீரா் ஒருவரும் காதலித்து வந்தனா்.
இந்த நிலையில் ராணுவ வீரா் கடந்த 15 நாள்களுக்கு முன்பு அவரது சகோதரி மகளை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதனால், தன்னை காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அன்பரசி வேலூா் அனைத்து மகளிா் காவல் புகாா் அளித்துள்ளாா். எனினும், இந்த புகாா் மீது போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அன்பரசி புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்த ஜமுனாமரத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அன்பரசியின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்த அன்பரசியின் உறவினா்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வேலூா் கிராமிய போலீஸாா் சமாதான பேச்சு நடத்தினா். இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.