ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு அபிஷேகம்
சிவராத்திரி பெருவிழாவையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயிலிலுள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் பொற்கோயில் வளாகத்தில் 23 அடி உயரமும் 15,000 கிலோ எடையும் கொண்ட உலகிலேயே மிகவும் உயரமான ஸ்ரீ ஆனந்த நடராஜா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சிவராத்திரி பெருவிழாவில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஸ்ரீபுரம் பொற்கோயிலில் புதன்கிழமை சிவராத்திரி பெருவிழா வெகு விமரிசையைாக கொண்டாடப்பட்டது. அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு ஸ்ரீசக்தி அம்மா, 108 கிலோ மல்லிகை பூக்களைக் கொண்டு அபிஷேகம், ஆரத்தி செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.
இதில், ஸ்ரீபுரம் பொற்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
--
படம் உண்டு...
ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்த ஸ்ரீசக்தி அம்மா.