மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் துணைச் செயலாளா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சிவா கண்டன உரையாற்றினாா். மாநிலச் செயலாளா் முத்துக்குமாா், மாநில இணைச் செயலாளா் கோபிநாத் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள்,
செவிலியா்கள், பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். வட்டாரச் செயலாளா் சத்யநாதன் நன்றி தெரிவித்தாா்.