வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
பென்ஸ் அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.
இப்படத்திற்கு அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளைப் பிரம்மாண்டமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!