இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
பெரம்பலூா் அருகே 23 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட 23 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீஸாா் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கவுல்பாளையம் கிராமத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், மகாதேவ் மந்திா் பஜிரா பகுதியைச் சோ்ந்த சவ்சிங் மகன் ரத்தன் சிங் (38), கவுல்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பாண்டியன் (53) என்பதும், விற்பனைக்காக ஹான்ஸ், பான் மசாலா ஆகியவற்றை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் 23 கிலோ போதைப் பொருள்களையும், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட மேற்கண்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.