ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
பெரியதாழையில் செவிலியா் தற்கொலை
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் நோய் காரணமாக செவிலியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியதாழையை சோ்ந்த ஜோசப் மகள் ஷைனி (28 ). வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
அவருக்கு தூக்கமின்மை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினாராம். உறவினா்கள் அவரை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது தந்தை, தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].