செய்திகள் :

பெரியார்: `சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது!' - திருமாவளவன் கண்டனம்

post image

"சங்பரிவார் பேசுகிற மத வழி தேசியம் தான், மொழி வழி தேசியத்தின், தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும்..." என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன், சீமான்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்திருக்கிறோம்.

பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் வெளியிட்டிருக்கிற புதிய விதிகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டுள்ளது.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்

துணைவேந்தர், பேராசிரியர் நியமனம் போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த விதிகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணியாற்றும்.

அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. நீண்டகாலமாகவே சங் பரிவார் கும்பல் இந்த சதி வேலையை செய்து வரும் சூழலில். மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் பெரியாரை குறி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது. இப்பேச்சு அவர் பேசுகிற அரசியலுக்கு எதிராக போய் முடியும். இந்திய அளவில் மதவழி தேசியம்தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும்.

தேசிய அளவில் சங்பரிவார் பேசுகிற மத வழி தேசியம்தான், தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும். அதை விடுத்து, தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெரு மதிப்புக்குரிய தந்தை பெரியார் அவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல, இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சீமான் பேச்சை அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால், சீமான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அரசியலைத்தான் தான் பேசுகிறோம் என்பதை சீமான் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையினால் விமர்சனம் வைத்துள்ளார். அதில், புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வேண்டும். இன்னும் தொன்மை காலத்து சொற்களே இருக்கின்றன என்று தமிழின் தொன்மையை குறிப்பதற்காக காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்படுகிறது என்கிற தொன்மையை உணர்த்துவதற்காக பேசியிருக்கிறார். காலத்திற்கு ஏற்ப, நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப,தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் என்கிற அந்த எதிர்பார்ப்பில் அவர் சொன்னதை தவறாக திரித்து பேசுகிறார்கள். அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் அது ஏற்புடையதல்ல" என்றார்.

'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ... மேலும் பார்க்க

RAID-க்கு பிறகு சட்டமன்றத்தில் தனி ரூட்டெடுக்கும் துரைமுருகன்? | கைதாவாரா Seeman? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* சட்டமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லாததற்கு துரைமுருகன் கண்டனம்!* திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ சீனிவாசன், சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாப... மேலும் பார்க்க

டங்ஸ்டன் : 'மண்ணின் மைந்தனாக என் மனம் படும்பாடு சொல்லித்தீராது..!' - எதிர்க்கும் ராமராஜன்

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புடங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகரும், இயக்குநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.``இன்று நாட்டையே திரும... மேலும் பார்க்க

"பெரியாருக்கும் சமூகநீதிக்கும் இதுதான் சம்பந்தம்..." - சீமானுக்கு ஒரு கடிதம்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு கடிதம்!ஊடகங்கள் முன்னிலையில் பெரியார் பற்றிய உங்களது வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட கடிதம் இது. "பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் முதல் podcast:``நான் கடவுள் அல்ல... நானும் இந்தி கிடையாது..."- வைரல் கிளிப்ஸ்!

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்டின் வழியே தொடர்ந்து உரையாடிவருகிறார். அவருடைய நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி கலந்துகொள்ளும் 'பீப்பிள் வித் ... மேலும் பார்க்க