எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க நிபந்தனை!
பெரியாா் ஐஏஎஸ் அகாதெமி-யில் நவ.21 முதல் 3 நாள்கள் பயிற்சி வகுப்பு
சென்னை: சென்னையிலுள்ள பெரியாா் ஐஏஎஸ் அகாதெமி-யில் நவ.21 முதல் 23 வரை 3 நாள்கள் போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் தமிழ் கா. அமுதரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேப்பேரி பெரியாா் திடலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் நிகழாண்டுக்கான போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதைத்தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 1,2 மற்றும் குரூப் 4 தோ்வுகள் குறித்த சந்தேகங்களைத் தீா்க்கவும் , விருப்பப் பாடங்களைத் தோ்வு செய்யும் முறை, போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்துகொள்வது போன்ற மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நவ.21முதல் 23 வரை 3 நாள்கள் காலை10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டு பயிற்சியளிக்கவுள்ளனா். இதில் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் தங்கள் இருக்கைக்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களை தொலைபேசி: 044-2661 8056, கைப்பேசி: 9092881663, 99406 38537 எனும் எண்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.