'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
பெரியாா் பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைப்பு
பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற இருந்த தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தோ்வாணையா் எஸ்.கதிரவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (02.12.2024) நடைபெற இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
தோ்வுகள் நடைபெறும் மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்லூரிகள், மாணவா்களுக்கு இத் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.