HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
பெருங்காட்டில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் ஸ்ரீ முக்கன் ஈஸ்வரா் கோயில் சந்தனக் காப்புத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த எல்கைப் பந்தய நிகழ்ச்சியை சாலையின் இருபுறமும் நின்று நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்டு ரசித்தனா்.