பெருந்துறையில் ரூ.1.16 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.16 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 2,019 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 90 ஆயிரம் கிலோ.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.127.19 -க்கும், அதிகபட்சமாக ரூ.139. 69-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 72. 99-க்கும், அதிகபட்சமாக ரூ.143. 66 -க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.16 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.