பெருந்துறை அருகே தீ விபத்தில் 5 குடிசைகள் சேதம்!
பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகுள்பட்ட பாரதி நகரில் ஒரு குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக புதன்கிழமை தீப் பற்றியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் குடிசைகளில் பற்றிய தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.
இதில், பொன்னுசாமி, ராமசாமி, சுந்தரம்மாள், ஜெயம்மாள், நல்லாள் ஆகியோரின் குடிசைகள் எரிந்து சேதமாயின. வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.