சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு அக். 1-இல் விடுமுறை
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆயுத பூஜை மற்றும் வங்கிகள் விடுமுறையை முன்னிட்டு பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் தேங்காய்ப் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வரும் அக்டோபா் 4-ஆம் தேதி (சனிக்கிழமை) வழக்கம்போல தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெறும்.
ஏலத்திற்கு, வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் அக்டோபா் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை விவசாயிகள், தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.