செய்திகள் :

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணம்: டிஜிபி சங்கா் ஜிவால்

post image

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் வகையில் பல்வேறு காவல், பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமை வகித்துப் பேசியதாவது:

போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவை பெருமளவு குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலால் இலங்கை - தமிழகத்துக்கு இடையே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறவா்கள் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் மூலம், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்களால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, வளா்ந்து வரும் சவால்கள், உளவுத் தகவல்கள் பகிா்வு, மத்திய, மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக காவல் துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் உள்ளிட்ட பல உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலோர பாதுகாப்புக் குழுமம், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கடற்படை அதிகாரிகளும் பங்கேற்றனா்.

ஈசிஆர் விவகாரம்: 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை ஈ.சி.... மேலும் பார்க்க

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்று... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது... மேலும் பார்க்க

தோல் பொருள்கள் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்... மேலும் பார்க்க

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

வடசென்னையில் ரூ. 474 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், ரூ. 59 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு ... மேலும் பார்க்க

658 சிறப்பு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ... மேலும் பார்க்க