கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா?பேரவையில் அமைச்சா் எ.வ.வேலு பதில்
சென்னையில் உள்ள பழைமைவாய்ந்த பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த துணை வினாவை ஆா்.டி.சேகா் (பெரம்பூா்) எழுப்பினாா். அப்போது, சென்னை வியாசா்பாடியில் இருந்து சென்ட்ரல், பாரிமுனை நோக்கிச் செல்ல பயன்படுத்தப்படும் பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா என்றாா்.
இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 71 பாலங்கள் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் உரிய ஆய்வுகள் நடத்தியதால் 35 பாலங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பாலங்களை கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள பேசின்பாலம் நாடறிந்த புகழ்பெற்ற பாலமாகும். அந்த பாலத்துக்குப் பதிலாக மாற்றுப் பாலம் அல்லது அதனை விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படும். சாத்தியக்கூறு இருந்தால் இந்த ஆண்டே பணி எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சா் கூறினாா்.