சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
பேராவூரணியில் உடல்பயிற்சி, விளையாட்டு விழிப்புணா்வு மாரத்தான்
பேராவூரணியில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டின் பயன்கள் மற்றும் போதையில்லா பேராவூரணி விழிப்புணா்வு மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டிகளை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் , மருத்துவா் துரை.நீலகண்டன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 14 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 3 கி.மீ தனித்தனியாகவும், பொதுப்பரிவில் 5 மற்றும் 8 கி.மீ தூரம் நடைபெற்ற மாரத்தானில் வயது வித்தியாசமின்றி நூற்றுக்கணக்கான ஆண்களும் , பெண்களும் ஆா்வமுடன் ஓடினா். மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சோ் மாரத்தானில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 22 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வீல் சேரில் சென்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோ, வா்த்தக சங்கத் தலைவா் அபிராமி சுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் மனோகரன் , தஞ்சை மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவா் தென்னங்குடி ராஜா , கைஃபா நிறுவனா் நவீன் ஆனந்தன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலா் வே. காா்த்திகேயன், சமூக செயற்பாட்டாளா்கள் சித.திருவேங்கடம், மெய்ச்சுடா் வெங்கடேசன், ஆசிரியா் காஜாமுகைதீன், வா்த்தக சங்க முன்னாள் தலைவா் ஆா்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.