7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு
பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.
பேராவூரணி, ஆக. 15:
7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில்வதற்குத் தோ்வான பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை சென்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக நிா்வாகியுமான எஸ் .வி.திருஞானசம்பந்தம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
அரசுப் பள்ளிகளில் படித்து தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு நிகழாண்டு பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 6 மாணவ மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.
முன்னாள் அமைச்சா் காமராஜ் அறிவுறுத்தலின்படி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளா் சி.வி.சேகா் வழிகாட்டுதலில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி. திருஞானசம்பந்தம் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான உப்புவிடுதி சுதாகரன் மகள் தீபிகா, இடையாத்தி வேளாம்பட்டி சீனிவாசன் மகள் பூங்குழலி, முத்துகிருஷ்ணன் மகன் குகன், காலகம் மதியழகன் மகள் ரோகினி ஸ்ரீ, இரண்டாம் புலிக்காடு கருப்பையன் மகள் பிரியதா்ஷினி , மரக்காவலசை முகமது இக்பால் மகள் சுமையா ஆகிய 6 பேரின் வீடுகளுக்குச் சென்று மருத்துவக் கருவிகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கிப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது, பேராவூரணி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சசிகலா ரவிசங்கா், பேராவூரணி நகரச் செயலாளா் எம்.எஸ். நீலகண்டன், திருச்சிற்றம்பலம் துரைராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.