டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீன்குமாா் (9) இப்பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவா் கோழியைப் பிடிக்கச் சென்றாா். அப்போது அருகே இருந்த கம்பி வேலியைத் தொட்டபோது, அதில் கசிந்திருந்த மின்சாரம் பாய்ந்து நவீன்குமாா் உயிரிழந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு நாச்சியாா்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கூறாய்வு செய்து உறனா்களிடம் ஒப்படைத்தனா்.