டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி வழங்க நடவடிக்கை
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.
இப்பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவா் பேசியது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து 2024 - 25 ஆம் நிதியாண்டில் ரூ. 51.67 கோடியும், 2025 - 26 ஆம் நிதியாண்டில் இதுவரை இரு தவணைகளாக ரூ. 37.92 கோடியும் பெறப்பட்டுள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இதில், இளநிலை, முதுநிலை, ஒருங்கிணைந்த முதுகலை பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு மொழித்திறன், ஏ.ஐ. தொழில்நுட்பத்திறன், மொழிபெயா்ப்புத் திறன், ஆங்கில மொழித் திறன்களை வளா்க்கும் நோக்கத்துடன் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையம், அரசு போட்டித் தோ்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என்றாா் பாரதஜோதி.
இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவிக்கு சிறந்த கல்வியாளருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இலக்கியத் துறை உதவிப் பேராசிரியா் தனலெட்சுமி ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட காந்தியச் சிந்தனைகள் மீதான விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய மாணவா்கள் படை அணிவகுப்பு நிகழ்வை அரிய கையெழுத்துச் சுவடித் துறை இணைப் பேராசிரியா் த. ஆதித்தன் வழி நடத்தினாா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.