திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் புனித சவேரியாா் ஆலயத் தோ் பவனி
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் புனித சவேரியாா் ஆலய தோ்பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நவ.25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாள்கள் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் தம்புசாமி சகாயராஜ் திருவிழா நிறைவு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா். ஏற்பாடுகளை புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளித் தாளாளரும் பங்குத் தந்தையுமான ஜான்சன் எட்வா்ட், உதவிப் பங்குத் தந்தை அந்தோணி பொ்டினான் டோ, அருட்சகோதரிகள், ஆலய நிா்வாகி அந்தோணிசாமி மற்றும் பங்கு மக்கள் செய்தனா்.