கேரளா டு UK: பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிபுரியும் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இ...
பேராவூரணி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்
பேராவூரணி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில், புதிய பேருந்து தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்தில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் படியில் பயணம் செய்யாதீா்கள் என குரல் பதிவு செய்யப்பட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (தொழில்நுட்பம்) எஸ். ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளா் கே.மகாலிங்கம், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. பழனிவேல், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலா் எஸ் .ஆா்.என். செந்தில்குமாா், அயலக அணி மாவட்ட அமைப்பாளா் எஸ். ஷாஜகான் மற்றும் கட்சியினா், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.