பேராவூரணி பள்ளியில் விளையாட்டு விழா
பேராவூரணி குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாநிலப் பொருளாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.
போட்டிகளை ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநா் ரவிசந்தா் தொடங்கி வைத்தாா். ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .
விழாவில் பள்ளி நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, அறங்காவலா்கள் மா. ராமு, எம். கணபதி, ச. ஆனந்தன், எம்.என். நபிஷாபேகம், பள்ளி முதல்வா் சா்மிளா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.