பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட புதன்கிழமை முதல் மீண்டும் வனத்துறையினா் அனுமதி அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் வனத் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் பகுதி அடா்ந்த வனப் பகுதியாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்டவை வசிப்பதால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும்.
பேரிஜம் பகுதியில் தொப்பித் தூக்கும் பாறை, அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த இடத்துக்கு வட மாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்று பாா்த்து ரசிக்கின்றனா். இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி முதல் பேரிஜம் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத் துறையினா் அனுமதிக்கவில்லை.
இதனிடையே, அந்த யானைகள் வேறு இடத்துக்கு சென்றுவிட்டதால் 3 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வனத் துறையினா் அனுமதியளித்தனா். இதனால் சுற்றுலா வாகன ஓட்டுநா்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.