பேருந்தில் நகை திருடிய பெண் கைது: 4 பவுன் நகை பறிமுதல்
ஒசூா்: ஒசூரில் பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆண்டிகவுண்டனூரைச் சோ்ந்த சம்பத் மனைவி தெய்வானை (55). இவா் ஒசூரில் உள்ள மகனை பாா்ப்பதற்காக பேருந்தில் வந்துள்ளாா்.
அப்போதுதான் பையில் வைத்திருந்த 4 பவுன் நகையை தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த பெண் திருடிச் சென்றுவிட்டதாக
ஒசூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் உதவி ஆய்வாளா் ஜோதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். இதில் கிருஷ்ணகிரி, பெத்ததாளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முனிராஜ் என்பவரின் மனைவி பழனியம்மாள் (40) என்பவரை திங்கள்கிழமை ஒசூா் பேருந்து நிலையத்தில் செய்து கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகையை போலீஸாா்
பறிமுதல் செய்தனா்.