பேருந்து நிலையத்தில் பெண் சடலம் மீட்பு
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாட்டுத்தாவணி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
45 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் யாா் என்கிற விவரம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.