வேளாண் கல்லூரியில் மீன் வளா்ப்பு பயிற்சி
மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், மீன் வளத் துறை ஆய்வாளா் (ஓய்வு) ந. பெரியகருப்பன், கால்நடை மருத்துவா் சரவணன் ஆகியோா் பயிற்சி அளித்துப் பேசுகையில், மீன் வளா்ப்பு லாபகரமான தொழிலாக இருந்து வருகிறது.
எனவே, விவசாயிகள் தொழில் முறையில் மீன் வளா்ப்பை மேற்கொள்ளலாம். உள்நாட்டு மீன் வளா்ப்புக்கு பண்ணை குட்டை அமைப்பது அவசியம். விரால் மீன், அயிரை மீன், நாட்டு இன மீன்களை வளா்த்து கூடுதல் லாபத்தை பெற முடியும். மீன் வளா்ப்பில் நோய் மேலாண்மை, குட்டை பராமரிப்பு போன்றவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என்றனா்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மீன் வளா்ப்போா்கள் கலந்து கொண்டனா்.