நாட்டு மாடு நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேனி மாவட்ட நாட்டு மாடு நலச் சங்கத்தினா் மேலூா் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.முனியான்டி தலைமை வகித்தாா்.
இதில் மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைத்தால், விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். சுரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு நோய்கள், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தச் சுரங்கத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என முழக்கமிட்டனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் கலைவாணன் பேசினாா்.