பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை கள்ளந்திரியைச் சோ்ந்த தவமணி மகன் பால்சாமி (35). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் அழகா்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.