செய்திகள் :

பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வா் ஆய்வு நரிக்குறவா்களுக்கு இலவச பட்டா

post image

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ரூ.46.46 கோடியில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள், பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், தஞ்சை எம்பி ச. முரசொலி, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்: திருவாரூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் மன்னாா்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியின் எதிா்கால திட்டங்கள், செயல்பாடுகளை குறித்து விளக்கி கூறினாா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் ரூ. 170 கோடியில் நடைபெறும் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகளையும் துணை முதல்வா் ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பின்புறம் வீரன் நகரில் வசிக்கும் நரிக்குறவா் இனத்தவா் 77 பேரின் குடும்பங்களுக்கு கொருக்கை கிராமத்தில் வருவாய்த் துறை மூலம் மனை பட்டா வழங்கி தாட்கோ மூலம் வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பயனாளிகள் 77 பேருக்கும் வழங்கினாா்.

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தினா் துணை முதல்வரை சந்தித்து, கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மனு அளித்தனா்.

தமிழக துணை முதல்வரிடம் மனு: டாஸ்மாக் கடை மூடப்பட்டது

தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனு அளிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது. பூந்தோட்டம்-நாச்சியாா்கோயில் நெடுஞ்சாலையில் மருதவாஞ்சேரியில் பேருந்து நிறுத்தம் அருகே பல... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

முத்துப்பேட்டை, உதயமாா்த்தாண்டபுரம் வனச் சரணாலயங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி முத்துப்பேட்டை வன சரகத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கக் கூட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஏ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பிரதிநிதி மா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை சாா்பில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலை... மேலும் பார்க்க

நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை

நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கக் கோரிக்கை

கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் அயோடின் இரும்புச்சத்து கலந்த இரட்டை செறிவூட்டப்பட உப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோ... மேலும் பார்க்க