பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்
வாழப்பாடி அருகே பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பேளூா் பேருந்து நிலையத்திலிருந்து தான்தோன்றீஸ்வரா் கோயில் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக குடிநீா் குழாய்கள் துண்டிக்கப்பட்டது. குடிநீா் குழாய்களை சாலையோரத்தில் மீண்டும் பாதிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், இப்பகுதி மக்களுக்கு சில தினங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
இதனால் அவதிக்குள்ளான இப்பகுதி மக்கள், வெள்ளிக்கிழமை மாலை காலி குடங்களுடன் திரண்டு வந்து பேளூா்-அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குழாய் பதித்து குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்ால் போக்குவரத்து சீரானது.