சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிசிலி (75) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவட்டாறு அருகே பேரை என்ற பகுதியைச் சோ்ந்தவா் சிசிலி. இவா், வெள்ளிக்கிழமை கொல்வேல் என்ற இடத்திற்கு செல்வதற்காக நடந்து சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த கல்லூரி மாணவா் நினீஷை (18) நிறுத்தி தன்னை கொல்வேல் பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளாா். நினீஷ் அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளாா்.
கேசவபுரம் பகுதியில் செல்லும்போது மழை பெய்ததால், சிசிலி கையிலிருந்த குடையை விரித்துள்ளாா். அப்போது, நிலை தடுமாறிய சிசிலி பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா்.
பலத்த காயமடைந்த சிசிலியை அப்பகுதியினா் மீட்டு, ஆற்றூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிசிலி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.