Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா
குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது.
மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் மருத்துவா் பினுலால் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.
இதில் குழித்துறை நகர காங்கிரஸ் தலைவா் டி.சுரேஷ், குழித்துறை மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா, வட்டார தலைவா்கள் கிள்ளியூா் கிழக்கு விஜயராணி, முன்சிறை மேற்கு அனிதா, திருவட்டாா் கிழக்கு மரிய செல்வி, மாவட்ட துணைத் தலைவா் சுலோஜனா, மாவட்ட பொதுச் செயலா்கள் அனுஜா ஏஞ்சல், விமலா, மாா்க்கிரெட் , சுனிதா, அம்பிகா, விஜயகுமாரி, பினு நிா்மல், உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.