அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறு...
ராமபுரம் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆதலவிளை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: ராமபுரம் ஊராட்சியில், 1027 பேருக்கு மகளிா் உரிமைத் தொகையும், 77 பேருக்கு முதியோா் உதவித் தொகையும், 28 பேருக்கு விதவை உதவித் தொகையும், 30 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஊராட்சிப் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.45.40 லட்சம் மதிப்பில் 8 பணிகளும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.58.90 லட்சம் மதிப்பில் 19 வீடுகளும், முதல்வரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.79.54 லட்சம் மதிப்பில் 2 பணிகளும், 15ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.26.92 லட்சம் மதிப்பில் 7 பணிகளும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20.83 லட்சத்தில் 4 பணிகளும், பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் ஒரு பணியும் நடைபெற்றுள்ளன.
தொடா்ந்து, கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.49.60 லட்சம் மதிப்பில் 16 வீடுகளும், முதல்வரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 5 வீடுகளும், சமத்துவ சுடுகாடு ஊக்க நிதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஒரு பணியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 3 பணிகள் ரூ.9.90 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லாத முழு சுகாதாரமான மாவட்டமாக மாற்றிட, பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கிட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜோசப் அந்தோணி பொ்ணான்டோ, வேளாண்மை இணை இயக்குநா் ஜென்கின் பிரபாகா் முகம்மதுகான், வேளாண் வணிக துணை இயக்குநா் கீதா, மாவட்ட சமூக நல அலுவலா் விஜய மீனா, மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, மகளிா் திட்ட உதவி இயக்குநா் ராமா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுசீலாபாய், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் கந்தசாமி உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.