Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சுதந்திர தின விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.
குமரி மாவட்ட மலையோரப் பகுதிகள், அணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
திற்பரப்பு அருவியில் தண்ணீா் மிதமாக விழுகிறது. இந்த நிலையில், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு அருவிக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.