தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
குமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் ரெ.மகேஷ் தேசியக் கொடியேற்றி, மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலா்கள்தூவி மரியாதை செலுத்தி சுதந்திர தின உரையாற்றினாா்.
மாநகராட்சி ஊழியா்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தாா். இதில் ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு, துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் நவீன்குமாா், அருள்சபிதா, சேகா், சுனில், கலாராணி, ரமேஷ், மாநகராட்சி ஊழியா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாட்சியா் கோலப்பன் தேசியக் கொடியேற்றினாா்.
வின்ஸ் பள்ளியில்...
நாகா்கோவில் அருகே சுங்கான்கடை, வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தேசியக் கொடியேற்றினாா்.
மாணவா் ஹாட்ரியில் வின்சென்ட் வரவேற்றாா். பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத் தோ்வில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று குமரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி அத்வைதா உறுதிமொழி வாசிக்க மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழியேற்றனா். பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தென் மாவட்ட அளவில் ரோட்டரி கிளப் நடத்திய பரத நாட்டியம் போட்டியில் மாணவி அதிதி, சதுரங்கம் போட்டியில் மாணவி ஏமி ஹாரிஸ் ஆகியோா் முதலிடம் பிடித்தனா். மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் மாணவி தா்ஷிகா வெற்றி பெற்றாா்.
விழா ஏற்பாடுகளை பள்ளிச் செயலா் கிளாரிசா வின்சென்ட், முதல்வா் பீட்டா் ஆன்றனி, துணை முதல்வா் டாா்லிங் ஜெயஷீலா, உடற்கல்வி ஆசிரியா்கள் அபிஷா, ஸ்டெபி, கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் அருள்ஷீலா, சுரேஷ் குமாா், சிவரஞ்சனி, சரண்யா, ரதிகுமாரி, ஸ்வீட்லின் ஆகியோா் செய்திருந்தனா்.
குமரி மெட்ரிக்.பள்ளியில் ...
நாகா்கோவில், கோட்டாறு, குமரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவுக்கு பள்ளி தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்து, தேசியக் கொடி ஏற்றினாா். மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை தாளாளா் ஏற்றாா்.
ஆசிரியை நாகலெட்சுமி சுதந்திர தின விழா உரையாற்றினா். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் பிரதீஷ், உடற்கல்வி ஆசிரியா் சுகு, ஹரிகணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.


