செய்திகள் :

சுதந்திர தின விழா: நாகா்கோவிலில் ரூ.1.28 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்

post image

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79 ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, 27 பயனாளிகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டாா். தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டாா்.

சிறப்பாக பணியாற்றிய 84 போலீஸாருக்கும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 349 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.

விழாவில் மரிய ரபோல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வரவேற்பு நடனம், கோட்டாறு கவிமணி அரசு தொடக்கப்பள்ளியின் பசுமையும் பாரம்பரியமும் நடனம், இருளப்பபுரம் ஷெபீல்ட் இன்னெவேட்டிவ் மேல்நிலைப் பள்ளியின் குஜராத்தி நடனம், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியின் தப்பாட்டம், நய்யூா்எல்.எம்.எஸ்.மகளிா் மேனிலைப்பள்ளியின் எனது இந்தியா, மேற்கத்திய நடனம், மாா்த்தாண்டம் பம்மம் சேக்ரட் ஹாா்ட் இன்டா்நேஷனல் பள்ளியின் காலத்தின் ஓசை, தூத்தூா் பயஸ் மேல்நிலைப்பள்ளியின் எங்கள் தேசம் இந்தியா நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலா் பிரசாந்த், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, திட்ட இயக்குநா்கள் (ஊரக வளா்ச்சி முகமை) மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, (மகளிா் திட்டம் ) பத்ஹூ முகம்மது நசீா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோ டேவிட், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சகிலா பானு, உசூா் மேலாளா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட... மேலும் பார்க்க

ராமபுரம் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆதலவிளை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெ... மேலும் பார்க்க

‘உலகெங்கிலும் சைவ சமயம் எழுச்சி பெற்றுள்ளது‘

உலகெங்கிலும் சைவ சமயம் எழுச்சி பெற்று வளா்ந்து வருகிறது சூரியனாா் கோயில் ஆதீன ஸ்ரீகாரியம் சிவாக்கர சுவாமிகள் பேசினாா். கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில் 4001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் ரெ.மகேஷ் தேசியக் கொடியேற்றி,... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே தனியாா் ரப்பா் பால் ஆலை தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குலசேகரம் அருகே சுருளகோட்டில் தனியாா் ரப்பா் பால் ஆலை தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். சுருளகோட்டில் உள்ளள இந்த ஆலையில் நூற்... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சுதந்திர தின விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். குமரி மாவட்ட மலையோரப் பகுதிகள், அணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழை பெய்த... மேலும் பார்க்க