பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலூா் சாயிநாதபுரம் தந்தை பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி தேவராஜ் (65). இவா், கிருஷ்ணவரம் கிராமத்தில் நடைபெற்ற உறவினா் திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக உறவினரான அருள் என்பவரது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு அமா்ந்து சென்றுகொண்டிருந்தாா்.
வந்தவாசி - ஆரணி சாலையில் செங்கம்பூண்டி காடு அருகே வளைவுப் பகுதியில் சென்றபோது, தேவராஜ் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.