கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
பைக்கில் வந்து பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்து பெண் ஊழியரிடம் நகையைப் பறித்துச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி திருவானைக்கா பகுதியைச் சோ்ந்தவா் சாமி மனைவி அகிலா (30). எடமலைப்பட்டிபுதூா் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக வேலைபாா்த்து வருகிறாா். பணிக்குச் செல்லும்போது, திருச்சி காந்திச்சந்தையில், உணவகத்துக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தைக்கு வந்த அவா், காய்கறி மற்றும் பொருள்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் எடமலைப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா், திடீரென அகிலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துச்சென்றுவிட்டாா்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.