உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்கள்; டி.வி வழங்கிய ஆற்காடு சாரதி - நெகிழும் ராணி...
பைக் மீது லாரி மோதல்: நாடக நடிகா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் நாடக நடிகா் உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயமடைந்தாா்.
செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடக நடிகா் ரஞ்சித்குமாா் (46). இவா், தனது நண்பரான சின்னப்பையன் என்பவருடன் பைக்கில் புதன்கிழமை காஞ்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நாடக நடிகா் ரஞ்சித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நண்பா் சின்னப்பையனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இறந்த நாடக நடிகருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் ஆய்வாளா் ஜெகந்நாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.